ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் விண்வெளி வீரர் அல்லாத உலகின் முதல் தனிநபராக 2023-ஆம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுலா செல்ல உள்ளார்.
ஜப்பான் கோடீஸ்வரரான Yusaku Maezawa எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் 2023-ஆம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுலா செல்ல உள்ளார். அதன் ஒரு பகுதியாக 12 நாள் விண்வெளி பயணம் சென்றிருந்த Yusaku Maezawa தற்போது பூமிக்கு திரும்பியுள்ளார். அதாவது கடந்த 8-ஆம் தேதி அன்று ரஷ்யாவின் Soyuz விண்கலம் மூலம் Yusaku Maezawa இரண்டு வீரர்களுடன் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் சென்றார்.
அதனைத் தொடர்ந்து 12 நாள் விண்வெளி பயணத்தை முடித்து விட்டு Yusaku விண்வெளி குழுவுடன் Kazakhstan-ல் வந்து இறங்கியுள்ளார். மேலும் விண்வெளி வீரர் அல்லாத உலகின் முதல் தனிநபராக Yusaku Maezawa வருகின்ற 2023-ஆம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தில் உள்ளார்.