வரும் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைனில் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர்களிடையே கருத்து கணிப்பு கேட்ட நிலையில் அவர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதுகையில் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் எனவும், காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பள்ளிகள் செயல்படும் எனவும் புதுச்சேரி கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 18ஆம் தேதி முதல் பள்ளிகள் முழுமையாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.