தைப்பூச திருவிழாவிற்கு ஆண்டுதோறும் பொதுவிடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஜனவரி 28ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று முருகனை தரிசிப்பார்கள். இந்த விழா வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு முருகபக்தர்கள் விரதமிருந்து பல்வேறு நேர்த்திக்கடன் செய்வார்கள். இதற்கு எப்பொழுதும் அரசு விடுமுறை கிடையாது.
இந்நிலையில் ஜனவரி 28 கொண்டாடப்படும் இந்த தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இனி வரும் ஆண்டுகளிலும் தைபூச திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இலங்கை மொரீஷியஸை போல தைப்பூச திருவிழாவிற்கு பொதுவிடுமுறை விடப்படும் என கூறியுள்ளார்.