Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல்… “ஜியோவின் நியூ இயர் கிப்ட்”… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

ஜனவரி 1 முதல் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் உங்களுக்கு வாய்ஸ் கால் இலவசம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகில் ஒரு மூலையில் இருக்கும் பாமர மக்கள் கூட பயன்படுத்தும் ஒரு நெட்வொர்க் எது என்றால் அது ஜியோ தான். ஜியோவை பொருத்தவரை மிகவும் பயனுள்ள ஒரு அமைப்பு. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் மற்றொரு நெட்வொர்க்குக்கு அழைக்கும் போது மட்டும்  கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஜியோ அல்லாத மற்ற எண்களுக்கு இலவச அழைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது. ஜியோ அல்லாத எண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐயுசி நிமிடங்கள் வேலிடிட்டி முடிவதற்குள் தீர்ந்து விடும். இதனால் ஒரு புதிய திட்டத்தை வாங்கவோ அல்லது ஜியோ இல்லாத எண்களுக்கு அழைப்பதற்காக நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

ஜனவரி முதல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவசம் என்ற புதிய மாற்றத்தை, தற்போது ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து ஜியோ நிறுவனம் கூறியதாவது: “ஆஃப்-நெட் உள்நாட்டு குரல்-அழைப்பு  கட்டணங்களை பூஜ்ஜியமாகுவதுடன், ஐ.யூ.சி கட்டணங்கள் ரத்து செய்யப்படுகிறது. ஜியோ மீண்டும் 2021 ஜனவரி 1 முதல் அனைத்து வாய்ஸ் கால்களையும் இலவசமாக்கும்” என்று தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |