Categories
உலக செய்திகள்

நாய்களை தூக்கி எறியப்படுவது போல… கொரோனாவால் இறந்தவரின் உடல் புதைப்பு… பார்த்து கதறும் குடும்பத்தினர்!

கென்யாவில் கொரோனா தாக்குதலால் உயிரிழந்த நபரின் உடலை பெரிய பையில் அடைத்து புதைக்கப்பட்ட நிலையில், அதை பார்த்து இறந்தவரின் குடும்பத்தார் கதறி அழும் காட்சி நெஞ்சை உருக்குகிறது.

கென்யா நாட்டில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 59 வயதான ஜேம்ஸ் ஒன்யாங்கோ (james onyango). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். இதையடுத்து நள்ளிரவு நேரத்தில் மருத்துவர்கள் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டின் அருகே கொண்டு வந்தனர். ஆனால் அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்படாமல் பெரிய பிளாஸ்டிக் பையில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.

Outcry in Siaya: A man who died from coronavirus buried in a skin ...

பின்னர் அவரின் உடலை போலீசார் மற்றும் சுகாதார அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் சடலத்தை புதைத்தனர். சவப்பெட்டியில் கூட வைக்காமல் மோசமான நடைமுறையில் அவரது உடலை புதைப்பதை பார்த்து ஜேம்ஸ் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுதொடர்பான வீடியோவை இராபர்ட் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், நாய்களை தூக்கி போடுவது போல போட்டு நம் மக்களை புதைக்கிறார்கள். இது நியாயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கென்யாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் 197 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |