Categories
சினிமா

”மூன்று கிளைமாக்ஸ் காட்சி” பட்டைய கிளப்ப போகும் ஜேம்ஸ் பாண்ட் புதிய படம் ….!!

ஜேம்ஸ் பாண்ட் புதிய படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் புதிய படமான ‘நோ டைம் டூ டை’ படக் கதையின் கரு லீக் ஆகாமல் இருக்க மூன்று மாறுபட்ட கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களில் 25வது படம், ‘நோ டைம் டூ டை’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தற்போதைய பாண்டாக இருக்கும் டேனியல் கிரேக் நடிக்கிறார். ஜமைக்கா, நார்வே, யுகே-விலுள்ள பைன்வுட் ஸ்டுடியோஸ், லண்டன் ஆகிய இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Image result for james bond

கடந்த வாரம் படத்தின் ஷுட்டிங்கில், டான்ஸ் புளோரில் ஏராளமானோர் நடனமாடிக் கொண்டிருக்க, அவர்கள் மீது விஷ வாயுவை செலுத்துவது போன்று படமாக்கப்பட்டது. இதையடுத்து இந்த கூட்டத்தில் நடனமாடிக்கொண்டிருந்த பாண்ட் விஷவாயு தாக்கி உயிரிழக்க, பின்னர் பாண்ட் இடத்தில் பெண் பாண்ட் நடிகையை அறிமுகம் செய்வார்கள் என்று இந்தக் காட்சி குறித்து ஹாலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டது.

Image result for james bond

இது ஒருபுறமிருக்க, பாண்ட் அமைதியான வாழ்க்கை வாழ ஜமைக்காவுக்கு செல்ல, நடிகை லஷனா லிஞ்ச் பாண்டாக அறிமுகப்படுத்தப்படுவார் என்று பேசப்பட்டது. இதனிடையே படத்துக்கு மூன்று மாறுபட்ட கிளமாக்ஸ் படமாக்கப்பட்டிருப்பது குறித்து தெரியவந்துள்ளது. ஸ்பை வேலையை விடுத்து ஜமைக்காவில் அமைதியாக வாழ்ந்து வரும் ஜேம்ஸ் பாண்ட்-ஐ தேடி வரும் சிஐஏ மற்றும் பழைய நண்பரின் வேண்டுகோளை ஏற்று கடத்தப்பட்ட விஞ்ஞானி ஒருவரை மீட்கும் பணியில் களமிறங்க, பாண்ட் படங்களுக்கே உண்டான அதிரடி ஆக்‌ஷன், சாகச காட்சிகளோடு நோ டைம் டூ டை உருவாகியுள்ளது.

முன்னாள் பாண்ட் நடிகரான பியர்ஸ் பிராஸ்னன், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஒரு பெண் நடிக்க வேண்டும். அவர்களுக்கு வழிவிடும் நேரம் இது என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தற்போது வெளியாகவிருக்கும் புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் இறுதியில் யாரும் எதிர்பார்க்காத திருப்புமுனை கண்டிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் ஏப்ரல் 3, 2020 அன்று திரைக்கு வருகிறது.

Categories

Tech |