இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மாடு குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அங்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில்,ஜல்லிக்கட்டு மாடுகளை அழைத்து வரும் தள்ளுவாடி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை மாடு குத்தியதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக 108 அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அதன்பின் அங்கு போட்டி நடைபெற்றது.