Categories
மாநில செய்திகள்

ஜோராக நடந்த ஜல்லிக்கட்டு…. சீறிப்பாய்ந்த காளைகள்…. முதல் பரிசை பெற்ற சங்கீதா எக்ஸ்பிரஸ் ….!!

அத்தியூரில் நடந்த காளை விடும் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

வேலூர் குடியாத்தம் அருகே வீர செட்டிபள்ளி ஊராட்சி குட்லவாரிபல்லி என்ற கிராமத்தில் 106 ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா நடந்தது. இதில் பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், லத்தேரி, குடியாத்தம், கிருஷ்ணகிரி, மாதனூர், காட்பாடி, வாணியம்பாடி மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வீ.கோட்டா, சித்தூர், பங்காரு, பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற்றனர். வீதியின் இரு பக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன் கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். அதைத் தொடர்ந்து போட்டிகளில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அணைக்கட்டு பகுதியில் நடந்த விழாவில் காளைகளுக்கு வித்தியாசமான பெயர்கள் சூட்டப்பட்டிருந்தது. பொலேரோ, நான் உன்னை காதலிக்கிறேன், கொரோனா எக்ஸ்பிரஸ், வரதா புயல், தமிழ்நாடு போலீஸ், மங்காத்தா, பில்லா என வித்தியாசமான பெயர்களில் காளைகள் அறிவிக்கப்பட்ட போது பலத்த ஆரவாரம் எழுந்தது. கடைசியாக பந்தய தூரத்தை 8.6 வினாடிகளில் கடந்து சங்கீதா எக்ஸ்பிரஸ் என்ற காளை முதல் பரிசை வென்றது.

 

Categories

Tech |