Categories
பல்சுவை

ஜாலியன் வாலாபாக் நிகழ்வின் பின்னணி…!!

சொல்ல முடியாத துயரத்தை கொடுத்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வின் பின்னணி பற்றிய தொகுப்பு

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி பல்வேறு காலகட்டங்களில் போராட்டம் நடைபெற்றாலும் 1900 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திர போராட்டம் நாடெங்கிலும் தீவிரமடைந்தது. இதனால் மக்களிடையே சுதந்திர போராட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப் வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட தொடங்கியது.

இதனை யூகித்துக் கொண்ட ஆங்கிலேயர்கள் ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் போராட்டக்காரர்களை கைது செய்து விசாரணையின்றி சிறையில் அடைக்கவும் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரௌலட் சட்டம் ஒன்றை இயற்றி நடைமுறைப் படுத்தினர். இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் வெடித்தன. மகாத்ம காந்தியும் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

நாளுக்கு நாள் போராட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதையும் கட்டுப்படுத்த முடியாமல் ஆங்கிலேய அரசு திணறியது. இந்த நிலையிலும் பஞ்சாபில் மக்கள் எங்கும் பொதுவெளியில் கூட்டம் போடக்கூடாது என்று ஆங்கிலேய அதிகாரி ஜெனரல் டயர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். இதனை அறிந்து சென்ற ஆங்கிலேய அதிகாரி ஜெனரல் டயர் அந்த திடலின் சிறிய வாயில் கதவுகளை அடைத்துவிட்டு கூடியிருந்த மக்களை துப்பாக்கியால் சுடுமாறு தனது சிப்பாய்களுக்கு கட்டளையிட்டார்.

இந்த துப்பாக்கி சூட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிலர் உயிர் பிழைக்க அந்தத் திடலில் இருந்த கிணற்றில் விழுந்து உயிர் இறந்தனர். இந்த கொடூர நிகழ்வு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தது.

Categories

Tech |