Categories
உலக செய்திகள்

தாயைக் கொன்ற மகன்…. இறக்கும் நேரத்திலும் தந்தையின் பாசப் போராட்டம்…. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!

தெருவில் சென்றுக் கொண்டிருந்தவர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவமானது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்தில் Plymouth  என்ற இடத்தில் 22 வயதான Jake Davison என்பவர் அவரது தாயுடன் வசித்து வருகிறார். இதனை அடுத்து நேற்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்த அவரின் தாயான Maxine என்பவரை சுட்டுக் கொன்றுள்ளார். இதனை தொடர்ந்து Jake கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்து தெருவில் சென்றுக் கொண்டிருந்த Lee Martynனையும் அவரது 3 வயது மகளான Sophieயாவையும் சுட்டுள்ளார். இதற்கிடையில் Lee தனது மகளை காப்பாற்றுவதற்காக Sophie  மீது விழுந்து தன் உடலால் குழந்தையை மறைத்துள்ளார். ஆனால் Jake சுட்ட முதல் குண்டு Leeயின் தலையைத் துளைத்தும் இரண்டாவது குண்டானது அவரின் உடலின் வழியாக Sophie மீது பாய்ந்துள்ளது. இதற்கு பிறகு இருவரும் leeயின் மனைவி பணிபுரியும்  Derriford மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

 

இவர்கள் இருவரின் இறப்பைக் கண்டு leeயின் மனைவி அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளார்.  குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு முன்பு leeயும் அவரது மனைவியும் தத்தெடுத்து வளர்த்து வரும் குழந்தை தான் sophia. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு உதவ சென்ற Ben Parsonage  மற்றும் அவரின் தாயான  Michelle என்பவரையும் Jake  சுட்டதில் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து தனது நாயுடன்  வாக்கிங் சென்ற Stephen Washington மற்றும் பெண்கள் அழகு நிலையத்தின் முன் நின்றுக்கொண்டிருந்த  Kate Shepherd போன்றோரையும் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து Jake தப்பித்து சென்றுள்ளான். இந்த சம்பவத்திற்கு காரணமான Jake பெண்கள் மீது வெறுப்பு கொண்ட அமைப்பைச் சேர்ந்தவன் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தினால் பிரித்தானியா மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |