மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை தோஹாவில் சந்தித்து பேசியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை அன்று கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை தோஹாவில் சந்தித்து பேசியுள்ளார். அதில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விவரங்கள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் துணை பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் ஆலோசித்து பேசியுள்ளார்.
மேலும் கொரோனா தொற்று இரண்டாவது அலை தாக்கத்தின் போது உதவிய கத்தார் நாட்டிற்கு தனது நன்றியை தெரிவித்ததாகவும், உள்நாட்டு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கத்தார் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது பின் அகமது அல் மெஸ்நத்தையும் நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக அரபு வளைகுடனான நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.