பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருக்கும் பிலாவல் பூட்டோ, ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்க தலைவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருப்பதாக கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் அரசு, ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்க தலைவரான மசூத் அசாரை கைது செய்யக்கோரி ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு கடிதம் அனுப்பியது. பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், ஆப்கானிஸ்தான் நாட்டின் கன்ஹார், நங்கர்ஹர் ஆகிய பகுதிகளில் அசார் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தார்.
அதன்பிறகு, தலீபான்களின் செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜபியுல்லா முஜாஹித், பாகிஸ்தான் நாட்டில் தான் மசூத் இருக்கிறார் என்று நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ளார் என்று பாகிஸ்தான் நாட்டினுடைய வெளியுறவு மந்திரி இன்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டில் தான் மசூத் இருக்கிறார். அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான பிரச்சனை கிடையாது. இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்குமிடையே இருக்கும் பிரச்சனை என்று கூறியிருக்கிறார்.