இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இந்தியா, கென்யா நாடுகளுக்கிடையேயான நல்லுறவு குறித்து கென்யா வெளியுறவுத்துறை மந்திரியுடன் கலந்து ஆலோசித்துள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் அரசு முறை பயணமாக கென்யாவுக்கு சென்றுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு குறித்து கென்யா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரேச்சல் ஒமாமோவுடன் கலந்து ஆலோசித்துள்ளார்.
அதே சமயம் அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கென்யா வெளியுறவுத்துறை அமைச்சர் ரேச்சல் ஒமாமோவுடன் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு குறித்து சனிக்கிழமை அன்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் தெரிவித்துள்ளது.