பிரபல நடிகர் ஜெய்யின் ‘குற்றமே குற்றம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் படி திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது.
ஆகையால் ரிலீஸுக்கு தயாராக இருந்த புதிய படங்கள் பல ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘குற்றமே குற்றம்’ என்ற திரைப்படமும் ஓடிடியில் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிகை திவ்யா நடித்துள்ளார். மேலும் ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.