டெல்லியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறையில் மசாஜ் உள்ளிட்ட சொகுசு வாழ்க்கைகளை திகார் ஜெயில் அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளதோடு, அது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதாவது போக்சோ வழக்கில் கைதான 5 கைதிகளை அமைச்சருக்கு பணிவிடை செய்வதற்கு நிர்பந்தித்ததாக விசாரணை குழு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் அமைச்சருக்கு மசாஜ் ரிங்கு என்பவர் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு போக்சோ வழக்கில் கைதானவர் ஆவார். இவர் விசாரணையில் கூறியதாவது, என்னை அமைச்சருக்கு பணிவிடைகள் செய்யுமாறு வற்புறுத்தியதோடு செய்ய மறுத்தால் மிரட்டலும் விடுகிறார்கள். மேலும் அமைச்சருக்கு பணிவிடைகள் செய்யும்போது அவருடைய அறையில் இருக்கும் தண்ணீரை கூட குடிப்பதற்கு அனுமதி கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.