Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவது கிரிமினல் குற்றமல்ல” பாஜக MP எச்சரிக்கை…!!

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவது கிரிமினல் குற்றமல்ல” ஜெகதால் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் என்று பாஜக MP எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். பாஜக_வும் எப்படியாவது மேற்கு வங்கத்தில் கால் ஊன்றிவிட வேண்டுமென்று தீவிரமான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தில் திரிணாமுல் , கம்யூனிஸ்ட் என்று சொல்லப்பட்ட நிலையில் பாஜக தனக்கான செலவாக்கை புதிதாக நிலை நிறுத்தியுள்ளது.

Image result for bjp trinamool

இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பின்  மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற போது அங்கிருந்த பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்பியதாக கூறி 10 பாஜகவினரை அம்மாநில ஜெகதால் காவல்துறை கைது செய்தது இதற்க்கு கண்டனம் தெரிவித்த பாஜகவின் டெல்லி பாரக்போர் தொகுதி  எம்.பி. அர்ஜூன் சிங் ‘‘ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவது கிரிமினல் குற்றமல்ல. நான் நாளை ஜெகதால் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |