இந்தியாவில் பெரும்பாலும் மூத்த குடிமக்கள் தங்களுடைய ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்பதற்காக பிக்சட் டெபாசிட் திட்டங்களை தான் அதிக அளவில் விரும்புவார்கள். இதனால் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வட்டி விகிதத்தை அதிகரித்து வழங்குகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வங்கிகளில் தற்போது பிக்சட் டெபாசிட்டுக்கானா வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 8.4% வரை பிக்சட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் unity small finance Bank தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிக்சட் டெபாசிட்டு களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு 7.9 சதவீதம் வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8.4 சதவீதம் வட்டியும் கிடைக்கிறது. இந்த சலுகை அக்டோபர் 31-ஆம் தேதியோடு முடிவடைகிறது. மேலும் அந்த வங்கியின் அறிவிப்பின்படி மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட்டுகளில் 1 வருடம் முதல் 500 நாட்களுக்கு 7.85 சதவீதம் வட்டியும், 501 நாட்களுக்கு 8.4 சதவீதம் வட்டியும், 18 மாதம் முதல் 502 நாட்களுக்கு 7.85 சதவீதம் வட்டியும், 18 மாதம் முதல் 2 வருடத்திற்கு 7.9 சதவீதம் வட்டியும், 2 முதல் 5 ஆண்டுகளுக்கு 8.15 சதவீதம் வட்டியும், 5 முதல் 10 வருடத்திற்கு 7.50 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.