தான் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக ஜாக்கிஜான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
ஜாக்கிஜான் அவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனும் தகவலை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்கிஜான் அவர்கள் “நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னை பற்றி கவலைபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். என்னை யாரும் எங்கும் அடைத்து வைக்கவில்லை. நான் நலமாக தான் உள்ளேன். தயவு செய்து கவலைப்பட வேண்டாம். பல இடங்களிலிருந்து எனக்கு பரிசு பொருட்களை அனுப்பி அனைவருக்கும் எனது நன்றிகள். அதில் இருந்த அனைத்துமாஸ்க்கையும் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க சொல்லி உள்ளேன்” என ரசிகர்கள் மனநிறைவு அடையும்படி பதிவிட்டுள்ளார்.