செங்கலபட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ் வேலைக்கு தகுதியானவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாத காலத்திற்கு பணிபுரிய செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மூலமாக பொது மருத்துவர், முதுநிலை மருத்துவ நுரையில் நிபுணர் தகுதியுடைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.
இதனால் பொது மருத்துவர் கல்வித்தகுதியில் 90 மருத்துவ அலுவலர்களும், டி.ஜி.என்.எம் நர்சிங் என்ற கல்விதகுதியில் 64 நர்சுகளும் மற்றும் 50 பல்நோக்கு மருத்துவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதால் விருப்பமுடைய நபர்கள் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை செங்கல்பட்டு என்ற முகவரியில் இன்று முதல் தங்களது கல்வித் தகுதி, சான்றிதழ், அடையாள அட்டை, மருத்துவ கவுன்சிலில் பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவற்றுடன் அணுகலாம் என்று மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.