இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் திரு ஜாகிர் நாயக்கின் பீஸ் செயலி மற்றும் அவரது யூடியூப் சேனலுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இஸ்லாமிய மத பிரச்சாரகர் திரு சாகிர் நாயக் தனது பீஸ் டிவி மூலம் மத வெறுப்புணர்வை தூண்டும் செயலில் ஈடுபட்டு வந்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த டிவி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பீஸ் ஆப் என்ற மொபைல் போன் செயலி மூலம் மத வெறுப்புணர்வையும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரங்களையும் திரு ஜாஹிர் நாயக் மேற்கொண்டு வருவதை புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது.
இந்தியாவில் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து தாய்நாட்டிற்கு எதிராகத் திருப்பி விடும் நடவடிக்கையில் திரு ஜாகீர் நாயக் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது.
இதன்படி திரு ஜாஹிர் நாயக்கின் பீஸ் செயலி யூடியூப் சேனல் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை பரிந்துரைத்துள்ளது. இதை ஏற்று விரைவில் திரு சாகிர் நாயக்கின் பீஸ் செயலி மற்றும் யூடியூப் சேனலுக்கு தடைவிதிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.