Categories
மாநில செய்திகள்

”ஜெ”மரண அறிக்கை; சிலருக்கு உதவ தந்திரம்… பொய்யான அறிக்கையால் பரபரப்பு …!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதா மரணத்தை அறிவிப்பது திட்டமிட்டு தாமதப்படுத்தப்பட்டதா ?  என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க விடாமல் சசிகலா தடுத்ததாக ஆறுமுகசாமி ஆணையம் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது.

2012 இல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா – சசிகலா இடையே சுமூக உறவு இல்லை என்றும் அந்த ஆணை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான பல தகவல்கள் அதில் கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று டாக்டர் பிரதாப் ரெட்டி, பொய்யான அறிக்கை வெளியிட்டதாகவும், ஆணையத்தின் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டு மருத்துவ சிகிச்சை பரிந்துரைத்ததாகவும், தானே அழைத்து செல்வதாகவும் ரிச்சட் பீலே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அதிகாரம் பெற்ற சிலருக்கு உதவுவதாக ஒரு தந்திரம் செய்து அமெரிக்க மருத்துவர் பரிந்துரைப்படி ஆஞ்சியோ சிகிச்சை செய்யாமல் தடுத்திருக்கிறார் என்றும்,  லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே கூறியதை திரித்து கூறி டாக்டர் பாபு ஆபிரகாம் தந்திரம் செய்ததாகவும் ஆணையத்தின் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

பல்வேறு புதிய தகவல்கள் இந்த ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மீதும் நடவடிக்கை எடுக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. ஜெயலலிதாவின் கையெழுத்துக்கள் தொடர்பான அரசுக்கு உரிய முறையில் ராமமோகன் ராவ் தெரிவிக்கவில்லை என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது வெளியான மருத்துவ அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருந்துள்ளதாகவும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |