இயற்கையை நாம் பாதுகாத்தால் தான் இயற்கை நம்மை பாதுகாக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக திரு. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் சுற்றுச்சூழல் ஒழுங்கு முறையை நீர்த்துப்போக செய்வதை நரேந்திர மோதி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இயற்கையை நாம் பாதுகாத்தால் தான், இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர் சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளர்.