தமிழ் சினிமா முன்னணி நடிகராக வலம் வருபவர் காமல். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் பல பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் உலக நாயகன் முயற்சியால் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டு இருவருப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இந்தியன் 2 படம் இடையில் சில காலம் நடைபெறாமல் இருந்த நேரத்தில் இயக்குனர் சங்கர் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு ராம் சரண் நடிக்கும் RC15 திரைப்படத்தை பிரமாண்டமாக இயக்கி வந்தார்.
தற்போது தமிழில் இந்தியன் 2 படம் துவங்கப்பட்டதால் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். இரண்டு பிரமாண்டமான அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் படம் என்பதால் படப்பிடிப்பு தன்னால் தாமதம் ஆகக்கூடாது என்று இரவு பகலாக வேலை செய்து வருகிறார் சங்கர். இந்நிலையில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு எந்தவித தடங்களுமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே ஷங்கரின் இந்த அயராத உழைப்பை பார்த்து உலகநாயகன் கமலஹாசன் அசந்து போனாராம். மேலும் இந்தியன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது முடிவாகியுள்ளது. அதன்படி இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரையில் வெளியாக உள்ளது. எனவே இதனை கருத்தில் வைத்துக்கொண்டு படக்குழு விறுவிறுப்பாக வேலை செய்து வருகிறது.