30 ஆண்டுகளுக்குப் பின் இயக்குனர் வஸந்த்தின் புதிய படத்தில் இளையராஜா இசையமைக்க உள்ளார் .
தமிழ் திரையுலகில் வஸந்த் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான ‘கேளடி கண்மணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதையடுத்து ‘நீ பாதி நான் பாதி’, ‘நேருக்குநேர் ‘,’ஆசை’ போன்ற பல்வேறு வெற்றி படங்களை உருவாக்கினார் . மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் விரைவில் வெளியாக உள்ளது . இந்நிலையில் இயக்குனர் வஸந்த் அடுத்ததாக புதிய படம் ஒன்றை அவரே தயாரித்து இயக்கவுள்ளார் . சமீபத்தில் வஸந்த் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் ஒப்புதல் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேளடி கண்மணி படத்தை அடுத்து 30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இளையராஜாவுடன் இயக்குனர் வஸந்த் இணைந்துள்ளார் . இயக்குனர் வசந்த் மற்றும் இளையராஜா கூட்டணியில் வெளியான கேளடி கண்மணி படத்தில் இடம் பெற்ற ‘மண்ணில் இந்த காதல்’ பாடல் மிகப் பிரபலமானது . இந்தப் பாடலை பாடகர் எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடியிருப்பார் . இன்றளவும் இந்த பாடல் ரசிகர்களால் மிக விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு பாடலாக அமைந்துள்ளது.