Categories
சினிமா தமிழ் சினிமா

விவசாயம் செய்யும் இயக்குனரின் மனைவி…. 90களின் பிரபல நடிகை…. வாழ்த்து தெரிவிக்கும் மக்கள்….!!

தமிழ் திரையுலகில் 90களில் பிரபல நடிகையாக வலம்வந்த தேவயானி விவசாயம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் 90களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை தேவயானி. இவர் குடும்ப கதைகளை மையமாக வைத்து திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அதிலும் இவரது சூரியவம்சம், நினைத்தேன் வந்தாய், பாட்டாளி போன்ற திரைப்படங்கள் மக்களை பெரிதும் ஈர்த்தன. மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து தேவயானி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் அவர் நடித்த கோலங்கள் சீரியல் மெகா ஹிட் ஆனது. இதனையடுத்து அவர் சில வருடங்களாக சினிமா பக்கமே திரும்பி பார்க்கவில்லை. தற்பொழுது மீண்டும் அவர் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரின் சொந்த ஊரான ஈரோட்டில் விவசாயம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஈரோட்டில் உள்ள அவரின் சொந்த நிலத்திற்கு அருகில் காலி மனைகள் விற்பனை செய்யப்படுவதை அறிந்துள்ளார். இதனால் அவரின்  நிலத்திற்கு அருகில் உள்ள அந்த மனையில் இரண்டு ஏக்கர் பரப்பளவை வாங்கி அதில் செண்டு மல்லியை பயிரிட்டுள்ளார். மேலும் விவசாய நிலத்தை அழித்து அனைவரும் பிளாட்டாக மாற்றி வரும் நிலையில் தேவயானி விவசாயம் செய்து வருவதை கண்டு மக்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Categories

Tech |