இயக்குனர் மணிரத்னத்திற்கு எதிராக பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி களமிறங்கியுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது . இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் தடைபட்டது. தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் கடும் கட்டுப்பாடுகளுடன் இந்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் வெப் தொடராக உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மெகா வெப் சீரிஸில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார் . இந்த தொடருக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார் . மேலும் இதில் நடிக்க உள்ள நடிகர்கள் , நடிகைகள், தொழில்நுட்ப விவரங்கள் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.