மத்திய அரசின் கனவு திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் 12 வது தவணை அக்டோபர் மாதம் முடிவுக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணையை எதிர்நோக்கி உள்ளனர். இருப்பினும் இ-கேஒய்சி அப்டேட் இன்னும் முடிக்காத விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் 12வது தவணையில் பலன் கிடைக்காது. அதனை தொடர்ந்து பிஎம் கிசான் திட்டத்தின் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தின் பலனை பெற இ-கேஒய்சி சரி பார்ப்பை நிறைவு செய்வது அவசியம்.
அதாவது பதிவு செய்த விவசாயிகள் திட்டத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் ஓடிபி அடிப்படையிலான இகேஒய்சி அப்டேட்டை முடிக்க வேண்டும். இதை செய்ய நீங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை பார்வையிடலாம். விவசாயிகள் பொருளாதார நிலையை மேம்படுத்தவே மத்திய அரசு இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விவசாயிகளுக்கு ஆண்டு ரூ.6000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை தலை ரூ.2000 விதம் 3 தவணைகளில் நேரடியாக விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதனையடுத்து இ-கேஒய்சி எப்படி முடிப்பதை பற்றி பார்ப்போம்.
- PM Kisan Yojana பயனாளிகள் e-KYC ஐ முடிக்க முதலில் pmkisan.gov.in இணையதளத்திற்குச் செல்லவும்.
- அங்கே ஃபார்மர்ஸ் கார்னர் ஆப்சனில் சென்று E-KYC டேப்பில் கிளிக் செய்யவும்.
- புதிய வலைப்பக்கத்தில், ஆதார் எண்ணை உள்ளிட்டு, சர்ச் பட்டனை கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- அந்த OTP நம்பரை பதிவிட்டால் போதும். இ-கேஒய்சி அப்டேட் செய்யப்பட்டுவிடும். பணம் வருவதிலும் சிக்கல் இருக்காது.