Categories
சினிமா தமிழ் சினிமா

“இவர் முடிவு எடுத்தால் உங்களுக்கு துயர நாள்” போஸ்டரில் தெரிக்கவிடும் ரசிகர்கள்….!!

மதுரையில் விஜய் ரசிகர்கள் தலைவா திரைப்படம் வெளியாகியது தினத்தை முன்னிட்டு அரசியல் வசனங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

தளபதி விஜய் நடித்த ” தலைவா” திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆனால் தமிழகத்தில் வெளியாகவில்லை. ஆகஸ்ட் 20-ஆம் தேதி பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் தமிழகத்தில் வெளியானது. தலைவா திரைப்படத்தின் ஏழாவது ஆண்டு வெளியீட்டு நாளையொட்டி விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களில் அரசியல் சர்ச்சைக்கான வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

image

 

“விஜய் முடிவு எடுத்தால் இனி உங்களுக்கு துயர நாளாக மாறும் என்றும், விரைவில் 234-ல் விஜய் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.” வழக்கமாக தனது திரைப்படங்களில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசி வரும் நிலையில், அவரின் ரசிகர்கள் போஸ்டரில் அரசியல் பேசுவது தொடர் கதையாக மாறிவிட்டது.

Categories

Tech |