Categories
அரசியல்

இவ்வளவு பேருக்கு கொரோனா சிகிச்சையா?… பட்டியலை வெளியிட்ட மாநில சுகாதாரத்துறை…!!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,614 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6,129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதனால் தற்போது வரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,25,456 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்ட 53,282 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மாவட்ட வாரியான விவரம்…

  • அரியலூர் – 515
  • செங்கல்பட்டு – 2,571
  • சென்னை – 13,255
  • கோவை – 3,143
  • கடலூர் – 3,228
  • தர்மபுரி – 172
  • திண்டுக்கல் – 912
  • ஈரோடு – 1,003
  • கள்ளக்குறிச்சி – 659
  • காஞ்சிபுரம் – 2,206
  • கன்னியாகுமரி – 1,439
  • கரூர் – 403
  • கிருஷ்ணகிரி – 301
  • மதுரை – 979
  • நாகை – 616
  • நாமக்கல் – 421
  • நீலகிரி – 322
  • பெரம்பலூர் – 209
  • புதுக்கோட்டை – 1,394
  • ராமநாதபுரம் – 497
  • ராணிப்பேட்டை – 1,054
  • சேலம் – 2,536
  • சிவகங்கை – 312
  • தென்காசி – 883
  • தஞ்சாவூர் – 880
  • தேனி – 1,974
  • திருப்பத்தூர் – 617
  • திருவள்ளூர் – 3,354
  • திருவண்ணாமலை – 847
  • திருவாரூர் – 570
  • தூத்துக்குடி – 627
  • திருநெல்வேலி – 1,247
  • திருப்பூர் – 672
  • திருச்சி – 947
  • வேலூர் – 1,161
  • விழுப்புரம் – 819
  • விருதுநகர் – 437
  • விமானநிலைய கண்காணிப்பு
  • வெளிநாடு – 47
  • உள்நாடு – 67
  • ரெயில் நிலைய கண்காணிப்பு – 4
மொத்தம் – 53,282 பேர் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |