தமிழகத்தின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார் இதையடுத்து தமிழகத்திற்கு புதிய கவர்னராக கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ஆர். என். ரவி பதவியேற்றார். இவர் 2019ஆம் ஆண்டு நாகலாந்தில் கவர்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில்சென்னை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய கவர்னர், பாதுகாப்பு வாகனங்களுடன் தான் வெளியில் செல்லும்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் போக்குவரத்து தடை செய்யாமல் இருப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.