Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

இன்னும் 55 கி.மீ தான்…. வேகமாக விரட்டி வரும் ”நிவர்”… கடைசி கட்ட எச்சரிக்கை …!!

நிவர்   புயல் இன்னும் 1 மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் என தேசிய வானிலை மையம் அறிவித்து உள்ளது.

நிவர்’ புயலானது தற்பொழுது கடலூரிலிருந்து 60 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்குத் திசையில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 14 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 55 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து 130 கிலோ மீட்டரிலும் புயலானது நிலைகொண்டுள்ளது.

‘நிவர்’ புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தொடர்பாக உதவிக்கு அழைக்க காவல்துறை உதவி எண்களை வெளியிட்டுள்ளது. 9498186868, 9444322210, 9962532321 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு போக்குவரத்து நெரிசல் தொடர்பான உதவிகளைக் கோரலாம் எனக் காவல்துறை  சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |