கேஜிஎஃப் 2 (KGF 2) திரைப்படம் எப்படி இருக்கும் என அதன் கதாநாயகன் யஷ் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் கேஜிஎஃப் (kgf). தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இத்திரைப்படம் பாக்ஸ்-ஆபிஸில் சக்கைபோடு போட்டது.

இந்தப் படத்தில் நடித்ததற்காக யஷ் ‘தாதா சாகேப் பால்கே விருது’ பெற்றார். சினிமா ரசிகர்கள் இதன் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தற்போது கேஜிஎப் 2 பற்றி ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.
கேஜிஎஃப் 2 பற்றி இயக்குநர் பிரசாந்த் நீல் வாய்திறக்க மறுக்கிறார். கேஜிஎப் 2 குறித்து கதாநாயகன் யஷ் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், கேஜிஎஃப் 2 மிக பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் இருக்கும். மக்களின் ஆதரவு எங்களுக்கு வலிமையைக் கொடுத்திருக்கிறது. கேஜிஎஃப் 2 பற்றி நான் தற்போதைக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான், கேஜிஎஃப் 2 திரைக்கு வரும்போது கேஜிஎஃப் 1 உங்களுக்கு சாதாரணமானதாகத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.