Categories
கிரிக்கெட் விளையாட்டு

அவுட் தான், அவுட் தான்…. கையை அசைத்த ஜடேஜா…. கட்டி அணைத்த தவான் …!!

நேற்றைய போட்டியில் ஷிகார் தவானின் அசத்தலான சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல் அணியை எதிர்கொண்டது. வலுவான அணியாக இளம் படைகளுடன் இருக்கும் டெல்லி கேப்பிடல் அணி, அனுபவ வீரர்களுடன் தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த சென்னை அணியை எதிர் கொண்டது. அடுத்தடுத்து வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணி துரதிஷ்டவசமாக தோல்வி அடைந்தது.

முதல் பேட்டிங் செய்து 179 ரன்கள் அடித்தும் சென்னை அணியால் வெற்றியை ருசிக்க முடியவில்லை. டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அதிரடி சதம் விளாசி அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார். தொடக்கத்தில் ஷிகார் தவான் அடுத்தடுத்து கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை சென்னை அணி வீரர்கள் தவறவிட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்த ஆட்டத்தில் ஷிகர் தவான் ரன் எடுக்க சென்ற போது பந்தை சரியாக ஸ்டம்புக்கு ரவீந்தர் ஜடேஜா அடித்தார். ஆனால் ஷிகர் தவான் கோட்டிற்கு உள்ளே வந்துவிட்டார். பந்து நேரிடியாக ஸ்டெம்பில் பட்டவுடன் அம்பயர் மூன்றாவது நடுவரிடம் கேட்டார். அப்போது சட்டென்று கையை உயர்த்திக் கொண்டு அவுட், அவுட் என ஜடேஜா வந்ததை கண்ட ஷிகார் தவான் கட்டியணைத்து ஆரத் தழுவினார். இந்த காட்சி ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |