Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 6 மாசம் தான்… புது ஒளி பிறக்க போகிறது… எல்லாமே மாறும்…!!

இன்னும் ஆறு மாதத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறும் மு க ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் சந்திரன் இல்லத் திருமண விழாவை காணொளி மூலம் நடத்தி வைத்து,  திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசினார். அப்போது, இந்த ஊழல் ஆச்சுக்கு இன்னும் ஆறு மாதம்தான். அதன்பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நிலைமை மாறும். நம்முடைய தமிழ்நாட்டிற்கு நிச்சயம் ஒரு புதிய வெளிச்சம் பிறக்க தான் போகுது. 10 ஆண்டுகளாக சூழ்ந்து இருக்கக்கூடிய இருட்டிலிருந்து மீண்டும் உதயசூரியன் வெளிச்சத்தைக் காண மக்கள் தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நாம் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். அவங்க வழங்கப்பட்ட தீர்ப்பை எவராலும் மாற்ற முடியாது. தெளிவான தீர்ப்பை, திடமான தீர்ப்பை, உறுதியான தீர்ப்பை, உதயசூரியனுக்கு ஆதரவான தீர்ப்பை தமிழக மக்கள் வழங்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள். அதை சிந்தாமல், சிதறாமல், ஒருங்கிணைத்து பெற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம்முடைய கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கு. மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக பேரூர் கழக உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் அந்த பொறுப்பு ரொம்ப இருக்கு. உங்களில் ஒருவனான நான் ஒட்டுமொத்த பொறுப்பையும் சுமந்து  இருக்கிறேன் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

கரை வேட்டியும் கருப்பு சோப்பும் துண்டும் தான் நம்முடைய நிரந்தர முகவரி நாம் திமுக காரர்கள் என்பதுதான் நம்முடைய அசையா சொத்து நம்மையோ எந்த இயக்கத்தையும் எவராலும் அசைக்க முடியாது ஆட்டமும் முடியாது தொட்டுக் கூட பார்க்க முடியாது என்ற அந்த உறுதியோடுதான் இந்த இயக்கத்தை நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். விரைவிலே உதய சூரியனால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் புது ஒளி பிறக்கப் போகிறது. அதற்கு நாம் நம்முடைய கடமை ஆற்றுவோம் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |