Categories
சினிமா தமிழ் சினிமா

“சொந்த காசுல சூனியம் வச்ச மாதிரி இருக்கு”…. இப்படி பண்ணுவானு நினைக்கவே இல்ல…. மாஸ்டரால் கொந்தளித்த வனிதா….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ராபர்ட் மாஸ்டர் அவருடைய முன்னாள் காதலி வனிதாவால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வனிதா ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, சொந்த காசுல எனக்கு நானே சூனியம் வைத்துக் கொண்ட மாதிரி இருக்குது. அவரை நம்பி வீட்டுக்குள்ள அனுப்பி வச்சது ரொம்ப தப்பா போச்சு.

நானும் ராபரட்டும் பல வருடங்களுக்கு முன்பாகவே பிரிந்த நிலையில், நான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. எனக்கும் வனிதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு பப்ளிசிட்டிக்காக தான் அப்படி பேசினோம் என்று ராபட்டின் மனைவி தான் அவரை அப்படி பேச வைத்திருக்கிறார். அதன் பின் ஒரு படம் தொடர்பாக என்னிடம் பேசி சேர்ந்து நடிக்க ரெடியா என்றும் கேட்டார். இந்நிலையில் மாஸ்டர் என்னிடம் வந்து பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றால் ரொம்ப நல்லா இருக்கும் என்று நிறைய பேர் சொன்னதாக கூறினார். இதனால்தான் விஜய் டிவியில் பேசி நான் மாஸ்டரை வீட்டுக்குள் அனுப்பி வைத்தேன்.

அங்கு சென்றால் கமல்ஹாசன் முன்னாடியே என்னைப் பற்றி பெருமையாக பேசுவதாக ராபர்ட் கூறினார். ஆனால் அதையெல்லாம் அவர் பொய் என்று நிரூபித்து என்னை யார் என்றே தெரியாது என்கிற மாதிரி பேசி விட்டார். நான் அவரிடம் பிக் பாஸ் வீட்டுக்குள் யாராவது காதலித்தால் அவர்களை காதலிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறுங்கள் என்று கூறினேன். ஆனால் கடைசியில் அவரே காதலிப்பார் என்று நினைக்கவில்லை. மேலும் நான் வாய்ப்பு வாங்கி கொடுத்தால் கடைசியில் என்னையே பகையாக்கிட்டு வீட்டுக்குள் போய் விட்டார் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |