Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கேள்வி கேட்பது சுலபம்… இறங்கி போராடுங்க வலி தெரியும்… ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி …!!

தமிழக அரசு கொரோனா இறப்பை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சம் அடைய வைக்கிறது. கடந்த 15 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுயதால் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில்,  397 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு உயிரிழப்புகளை மறைகின்றது என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் தமிழக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவால் இறந்தவரின் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை. வெளிப்படைத் தன்மையோடு அரசு செயல்பட்டு வருகிறது. தவறான  குற்றசாட்டை யாரும் கூட வேண்டாம். எதிர்க்கட்சித் தலைவர் அரசை தேவையின்றி விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். கேள்வி கேட்பது சுலபம், களத்தில் இறங்கி போராடும் போது தான் அதன் வலி தெரியும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Categories

Tech |