நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி பிரேம் நகரில் சுரேஷ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த சரளா(20) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சுரேஷ் தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சரளாவுக்கும், சுரேஷ்க்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றிப்போய்யுள்ளது. இதனால் சரளா மிகவும் மனமுடைந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சுரேஷ் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சரளா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் சுரேஷ் வீட்டிற்கு திரும்பிய நிலையில் மனைவி தூக்கியில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சரளாவை மீட்டு உடனடியாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சரளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் திருமணமாகி 1 1/2 ஆண்டுகளே ஆன நிலையில் தற்கொலை குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்