Categories
அரசியல் மாநில செய்திகள்

டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்து அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிடுங்கள் – உதயநிதி ஸ்டாலின் ட்வீட் !

டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்து அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிடுங்கள் என உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், திடீரென மதுபான கடைகளை திறப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறப்பதால் சமூக தொற்று மேலும் பரவலாகும் வாய்ப்பே அதிகம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டிக்கும் வகையிலும், மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும் மக்கள் அனைவரும் நாளை கருப்பு சின்னம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன்பு 5 பேருக்கு அதிகமாகாமல் நின்று அதிமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்புமாறும் திமுக கூட்டணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில், ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து, தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் இளைஞரணியினர் கருப்புச் சின்னம் அணிந்து தங்களின் வீட்டின் முன்பு நின்று கொரோனா ஒழிப்பில் தோல்வி அடைந்த அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும்! என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |