தமிழகத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடைசி தேதி நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு தொழிற் பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு சில பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது.இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கும் விதமாக மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி அரசு தொழில்நுட்ப நிறுவனம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.பயிற்சிக் காலத்தின் போது மாதம்தோறும் 750 ரூபாய் உதவித்தொகை, விலையில்லா பாடப்புத்தகம்,வரைபட கருவிகள் மற்றும் மடிக்கணினி உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.இதுவரை விண்ணப்பிக்காத மற்றும் விண்ணப்பித்தும் சேராத மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு 96886 75686, 88831 16095, 96882 37443 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.