சுஷாந்தின் தற்கொலைக்கு இதுதான் காரணம் அவரது நண்பர் வெளியிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவரின் தற்கொலைக்கான காரணத்தை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் மும்பை காவல்துறையினர் அவரது காதலியான ரியா சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுஷாந்த் நண்பரான சித்தார்த் பிதானி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது” ஜூன் 8ம் தேதி சுஷாந்த் முன்னாள் மேனேஜர் திஷா மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது காதலருடன் இருந்தபோது அந்த தற்கொலை நடந்தது. இச்சம்பவத்திற்கு சுஷாந்த் தான் காரணம் என்பது போல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
மேலும் திஷா சுஷாந்தின் மேனேஜராக கொஞ்ச நாட்கள் தான் இருந்தார். இதுதொடர்பாக சுஷாந்த் என்னிடம் ‘ ஒரு நாள்தான் என் வாழ்க்கையில் அந்த மேனேஜரை பார்த்திருக்கிறேன் ‘ எனக்கூறி அழுதார். அத்துடன் அவரது காதலி ரியா பிரிந்து சென்றுவிட்டார். ரியா பிரிந்துசென்ற மறுநாள் அவர் எந்த அளவிற்கு மனமுடைந்து இருந்தார் என்பதை சுஷாந்த் சகோதரியும், நானும் நேரடியாக கண்டோம். அழுதுகொண்டே இருந்தார். ரொம்ப விரக்தி அடைந்து மயங்கி விட்டார்.
அதற்கு அடுத்த நாள் தான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். எனவே அவரின் தற்கொலைக்குக் காரணம் ரியாதான்” என கூறினார். இந்த அதிர்ச்சித் தகவல் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரியா, நடிகை ஆலியா பட்டின் தந்தையும், தயாரிப்பாளருமான 71 வயதாகும் மகேஷ் பட்டுடன் காதலில் இருக்கிறார் என பேசப்பட்டு வருகிறது. அதனால்தான் சுஷாந்த்தை ரியா பிரிந்து சென்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது.