Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதுக்கா இப்படி பண்ணுவ… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… வலை வீசித் தேடும் காவல்துறையினர்…!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளியை அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தளவாய்புரம் பகுதியில் கூலித் தொழிலாளியான அரி ராமன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு  அரிராமன் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட்டத்தில் தெரியாமல் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ்குமார் என்பவருடைய காலை மிதித்து விட்டார். இதனால் கணேஷ்குமாருக்கும், அரிராமனுக்கும் இடையே நடந்த  தகராறில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரிராமன் மற்றும் அவரின் நண்பரான ராஜா என்பவருடன் சேர்ந்தமங்கலம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சென்ற கணேஷ்குமார் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அரிராமனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் படுகாயமடைந்த அரிராமன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்த அவரின் நண்பரான ராஜா அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து ராஜா அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அரிராமனை  உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அரிராமனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொழிலாளியை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்ற கணேஷ் குமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |