Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய கடைக்காரர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீ அபினவ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் காவல்துறையினருக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா பாக்கெட்டை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்கு உள்ள கடை ஒன்றில் சோதனை செய்தபோது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் கடைக்காரர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் தடையை மீறி புகையிலை பொருட்களான குட்கா விற்ற குற்றத்திற்காக கடைக்காரரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |