Categories
சினிமா தமிழ் சினிமா

‘இது என் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அல்ல’… பிக்பாஸ் ஆரியின் வைரல் ட்வீட்…!!!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் ரெட்டை சுழி ,மாலைப் பொழுதின் மயக்கத்திலே, மாயா ,நெடுஞ்சாலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் . இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த ஆரி இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆனார் . இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் .

இந்நிலையில் சென்னை மெரினா மாலில் ஆரி தனது ரசிகர்களை நேரில் சந்திக்க சென்றுள்ளார் . மேலும் அவர் தனது ரசிகர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் ‘இது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அல்ல… என் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்’ என்று பதிவிட்டுள்ளார் . தற்போது ஆரியின் இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |