Categories
உலக செய்திகள்

இத்தாலியில் ஓட்டுனர்கள் பற்றாக்குறை…. பொய்யாக வெளிவந்த தகவல்கள்…. எச்சரிக்கை விடுத்த மங்கள ரந்தெனிய….!!

பிரித்தானியாவில் கனரக வாகன ஓட்டுனர்களின் பற்றாக்குறையால் இலங்கை ஓட்டுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல் பரவியுள்ளது.

பிரித்தானியா நாட்டில் ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் கன ரக வாகனங்கள் இயங்காமல் உள்ளன. இதனால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இலங்கை ஓட்டுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது குறித்து எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

மேலும் சாரதி பற்றாக்குறை உள்ளது என்ற அறிவிப்பு மட்டுமே இலங்கை அரசிடம் விடுக்கபட்டது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது மேலாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார். குறிப்பாக பிரித்தானிய நாட்டில் கனரக ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை உள்ளது இலங்கை மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இதனால் இலங்கையர்கள் பிரித்தானியா நோக்கி செல்ல ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை ஓட்டுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக போலியான விளம்பரங்களை பத்திரிக்கையில் பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி பிரித்தானிய நாட்டுக்கு அனுப்புவதாக கூறி பணம் கொள்ளையடிப்பதும் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் கவனமாக இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது மேலாளர் மங்கள ரந்தெனிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |