இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற விமான விபத்து குறித்த வீடியோ விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இத்தாலியின் மிலன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக பி.சி-12 விமானமானது லிணட் விமான நிலையத்தில் இருந்து பகல் 1 மணிக்கு சார்டிநியா தீவுகளில் உள்ள ஆல்பியா விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே முழுவதுமாக தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. குறிப்பாக மிலன் நகரின் அருகில் San Donato Milanese சுரங்கப்பாதை நிலையம் உள்ளது.
இந்த பகுதியில் உள்ள 2 அடுக்குகள் கொண்ட அலுவலக கட்டிடத்தின் மேல் தீப்பற்றி எறிந்த விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த காட்சியை தற்போது அவ்வழியே சென்ற ஒரு வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை பிரபல தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் விமானம் செங்குத்தாக பயணித்து கட்டிடத்தின் மீது மோதியது பதிவாகியுள்ளது. அதோடு விமானத்தை இயக்கியவர் ரோமானிய நாட்டின் மாபெரும் பணக்காரர் டேன் பெட்ரஸ்கு(68) ஆவர்.
இந்த விமானத்தில் பெட்ரஸ்குவின் மனைவி, மகன் உட்பட 7 பேர் பயணித்துள்ளனர். மேலும் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அவர் விமானத்தை மாற்று பாதையில் இயக்கியுள்ளார். இது குறித்து விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பெட்ரஸ்குவிடம் கேட்டதற்கு முறையான எந்த பதிலும் கிடைக்கவில்லை என கூறப்பட்டது. தற்போது விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டு விசாரணை நடத்தி வருவதாக இத்தாலியின் தேசிய விமான பாதுகாப்பு நிறுவனம் தகவல் அளித்துள்ளது.