வணிகர்கள் நகை மற்றும் ஜவுளி கடை திறக்க கோரி கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2-ம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு அமல்படுத்தி உள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து உள்ள மாவட்டங்களின் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் சலூன் மற்றும் டாஸ்மார்க் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் நகை, ஜவுளி, நகை அடகு போன்ற கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் நகை, ஜவுளி மற்றும் அடகு கடைகள் திறக்க வலியுறுத்தி கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்திக் கொண்டு செல்லும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்ந போராட்டமானது வணிகர் சங்க தலைவர் ஞானவேல் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் ஜவுளி வணிகர் சங்கத் தலைவர் ஏ.வி.எம் குமார், வணிகர் சங்க இளைஞர் அணி செயலாளர் அருண்பிரசாத் மற்றும் பலர் பங்கேற்றனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் ஜவுளி, நகை மற்றும் அடகு கடைகளின் முன்பு நின்று போராட்டம் நடத்தினர். அதன் பிறகு கோரிக்கை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு வணிகர்கள் முக்கிய வீதி வழியாக சென்ற போது கடைகளை திறக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டே சென்றனர்.