நினைவாற்றலை இழக்க செய்யும் 7 வகையான உணவு பொருட்கள்.
சர்க்கரை:
தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு சர்க்கரை மட்டுமே உட்கொள்ளவேண்டும். ஆண்கள் 38 கிராம் அதாவது 9 டீஸ்பூன், பெண்கள் 25 கிராம் அதாவது 6 டீஸ்பூன். சர்க்கரை அதிகமாக உட்க்கொண்டால் பி.டி.என்.எப் மற்றும் இன்சுலின் அளவு குறைந்து ஞாபக சக்தி குறையும்.
மாவுப்பொருட்கள்:
பரோட்டா, பிஸ்கட், கேக், சாக்லேட், பீட்சா மற்றும் ஐஸ்க்ரீம் போன்ற உணவுகள் மூளையில் நரம்புகளின் செயல்திறனை குறைக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது.
பெரியவகை மீன்கள்:
மீனில் புரோட்டீன், விட்டமின் “டி”, ஒமேகா-3, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் மூளைக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும். ஆனால் சுறா போன்ற பெரியவகை மீன்களில் மெர்குரி அளவுஅதிகமாக இருப்பதால் நரம்பு மண்டலத்தைத் தாக்கி ஞாபக சக்தியை குறைகிறது.
பொரித்த உணவுகள்:
பொரித்த உணவை அதிகமாக டிரான்ஸ்பாட் என்ற ஒரு விதமான கொழுப்பு உள்ளது. மரணமும் மூளையில் நரம்புகளை அழித்து, ஞாபக சக்தியை அழித்து காக்நிட்டிவ் பியூன்க்ஷன் என்ற அறிவாற்றலை குறைக்கிறது.
ஃபாஸ்ட் புட் மற்றும் ஜங்க் புட்:
இது மிகுந்த சுவையும்,மனமும் கொண்டது. பாஸ்ட் புட் தொடர்ந்து சாப்பிட்டால் மூளையில் இருக்கும் நியூரான்களில் உற்பத்தியை தடுத்து செல்களை சிதைக்கிறது.மேலும் மூளையில் முக்கிய இப்பகுதியான ஹிப்போகேம்ப்பஸை சிதைத்து நினைவாற்றலை குறைக்கிறது.
உப்பு:
ஊறுகாய், பிஸ்கட், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், சூப் வகைகள், சிப்ஸ் வகைகளில் உப்பு அதிகம் உள்ளதால் இதுபோன்ற உணவுகளை நிறைய சாப்பிட்டால் மூளைக்கு செல்லும் இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவை குறைத்து ஞாபக சக்தியை குறைக்கிறது.
அஜினோமோட்டோ:
அஜினோமோட்டோ என்பது மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற உப்பு. இது உணவில் அதிக சுவையை கொடுக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டால் கை,கால் நடுக்கம், தலைவலி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வருவதோடு மூளையையும் அதிகமாக பாதிக்கிறது.