Categories
தேசிய செய்திகள்

இத்தாலி, தென்கொரியா, ஈரானியர்கள் இந்தியா வர தடை – வெளியுறவுத்துறை அதிரடி …!!

இந்திய பயணிகளுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

உலக அரங்கையே மரண பீதியில் அசைத்து பார்த்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தபட்டு முழுமையான சிகிச்சை மேற்கொண்டதில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் அலுவலகத்தில் நடந்த அவசர ஆலோசனையில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு இந்தியாவில் விமான நிலையங்களில் நடைபெறக்கூடிய சோதனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

இதையடுத்து கொரோனா வைரஸ் கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை என்ற ஒரு நம்பிக்கை அளிக்கக் கூடிய  வார்த்தையையும் ,  அறிவுறுத்தலையும் அவர் நாட்டு மக்களுக்கு  மோடி தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் பல்வேறு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு துறைகளும் மாநில அரசுடன் இணைந்து செயல்படுகின்றன என்று மோடி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இத்தாலி தென்கொரியா ஈரானியர்கள் இந்தியா வர தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை  தெரிவித்துள்ளது. ஜப்பானியர்கள் இந்தியா வருவதற்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனா , தென்கொரியா , இத்தாலி , ஈரான் , சவுதி , ஜப்பான் நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா குறைவாக பாதித்த நாடுகளில் இருந்து வரும் இந்திய பயணிகளுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |