இத்தாலி மாடலை விலங்கு காப்பகத்திலுள்ள சிறுத்தை ஒன்று கடித்து குதறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டின் அழகியும் கவர்ச்சி மாடலுமானவர் 36 வயதான Jessica Leidolph. இவர் Nebra என்ற நகரிலுள்ள விலங்குகள் காப்பகத்திற்கு போட்டோஷூட் எடுக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர் 16 வயது சிறுத்தையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அந்த சிறுத்தை Jessica மீது பாய்ந்து அவரை தாக்கியுள்ளது. மேலும் அவரின் காது, கண்ணம், தலை போன்ற பகுதிகளை கடித்து குதறியுள்ளது. இதனால் சுயநினைவு இழந்த Jessica சரிந்து விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை ஹெலிகாப்டரின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதை சுயநினைவிலும் Jessica அறிந்துள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Jessicaவிற்கு முகத்தில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இனிமேல் Jessica வாழ்நாள் முழுவதும் தழும்புகளுடன் இருக்கவேண்டும் என்பதால் அவரின் தொழிலுக்கும் வருவாய்க்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் Nebra விலுள்ள அந்த விலங்கு காப்பகத்தில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளதா என்றும் ஒருவேளை இல்லையெனில் அதன் உரிமத்தை ரத்து செய்வது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். அதிலும் Jessica ஒரு கவர்ச்சியான மாடல் என்றாலும் அவர் ஒரு விலங்கு நல ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.