இத்தாலி அரசு இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு பயண தடையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. எனவே இத்தாலி அரசு கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசியில் இந்திய மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. இந்த கட்டுப்பாடு, இன்றுடன் முடிவடைந்தது.
எனினும் இந்தியாவில் தற்போதும் கொரோனா பரவல் இருப்பதால், ஜூன் 21ம் தேதி வரை இத்தடையை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் வங்காளதேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கும் ஜூன் 21-ஆம் தேதி வரை இத்தாலி அரசு பயணத்தடை விதித்திருக்கிறது.